பயோமின் வரலாறு

1983 இல் ஒரு வாடகை கிடங்கில் பயோமின் துவங்கப்பட்டது. சிறிய அளவில் பயோமின் துவங்கப்பட்டதில் இருந்து, ஆரோக்கியமான விலங்கு ஊட்டச்சத்து துறையில் உலகளாவிய தலைவராக உருவெடுத்திருக்கிறது.

1983-1992

 • ஆஸ்திரியாவில் நிறுவப்பட்ட பயோமின்: எரிச் மற்றும் மார்கரெட் எர்பர் இருவரும் போட்டர்ன்பர்னில் உள்ள ஒரு வாடகைக் கிடங்கில் இருந்து தீவன சேர்க்கைகள் மற்றும் முன்கலப்புகளைத் தயாரித்து ஆஸ்திரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர்
 • "Natürlich im Futter" (மொழிபெயர்ப்பு: தீவனத்தில் இயற்கையாகவே) என்ற டேக்லைனுடன் அது முதலில் வழங்கப்பட்டது
 • முதல் புரோபயாடிக் ப்ரீமிக்ஸ் லைன், புரோனிஃபயர் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது
 • பயோமின் மைக்கோடாக்சின் செயலிழப்புக்காக ஆண்டிடாக்ஸ் ® ப்ளஸ் என்ற பிராண்டுடன் இன்டர்பிரெமிக்சை வாங்கியது
 • பன்றிக்குட்டிகளுக்கான அமிலமயமாக்கப்பட்ட பால் மாற்றான பயோலிக் அறிமுகப்படுத்தப்பட்டது
 • ஸ்டிரியா, ஃபிரிட்ஸ் ஜெட்லருக்கான முதல் விநியோகஸ்தர் நியமிக்கப்பட்டார்
 • ஆண்டிடாக்ஸ்® ப்ளஸ் முதன் முதலில் ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
 • ஆரம்ப முதிர்ச்சியடைவதற்கு பிக் உற்பத்தி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது
 • வியன்னாவில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மைக்கோடாக்ஸின் செயலிழப்பு பற்றிய ஆராய்ச்சி துவக்கப்பட்டது
 • தென் கொரியா, தாய்வான், தாய்லாந்து மற்றும் மலேசியாவில் முதல் மைக்கோடாக்ஸின் சிம்போசியம்கள் துவங்கப்பட்டன
 • ஆஸ்திரியா, ஹெர்சோகன்பெர்கில் புதிய தலைமையகம் தொடங்கப்பட்டது
 • எக்கோஸ்டேட்® மற்றும் பயோட்ரோனிக்® தயாரிப்புகள் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டன
 • மைக்கோடாக்சின் செயலிழப்புக்கான இரண்டாவது தலைமுறை தயாரிப்பான மைக்கோஃபிக்ஸ்® பிளஸ்க்கு (Mycofix® Plus ) காப்புரிமை பெறப்பட்டது
 • மலேசியாவில் புதிய அலுவலகம் தொடங்கப்பட்டது
 • INUSA மெக்ஸிகோ மூலம் தென் அமெரிக்காவில் விரிவாக்கம் செய்யப்பட்டது

1993-2002

 • அக ஆராய்ச்சி தொடங்கப்பட்டது
 • வியட்நாமில் அலுவலகம் திறக்கப்பட்டது
 • மலேசியாவின் கோலாலம்பூரில் ஆசியாவின் பிராந்திய தலைமையகம் தொடங்கப்பட்டது
 • IFA டல்னில் புதிய ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன
 • மைக்கோடாக்சின் கண்டறிதல் துறையில் ரோபோ லேப்ஸ்® உடன் இணைந்தோம்
 • பயோமின் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் ஆசியாவில் புதிய பிராந்திய தலைமையகமாக நிறுவப்பட்டது
 • டெக்சாஸில் சான் அன்டோனியோவில் பயோமின் அமெரிக்கா இன்கார்ப் துவங்கப்பட்டது
 • யூபாக்டீரியம் BBSH 797 உயிரியக்கம் மூலம் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்யும் மூன்றாம் தலைமுறை மைக்கோஃபிக்ஸ்® பிளஸ் ( Mycofix® Plus) அறிமுகப்படுத்தப்பட்டது
 • ஸ்லோவாகியா மற்றும் ஜெர்மனியில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • ஷாங்காய், சீனா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • இயற்கையான வளர்ச்சி ஊக்குவிப்பான்கள் அறிமுகம்: பயோமின்® C-EX, பயோமின்® IMBO மற்றும் Biomin® P.E.P
 • மைகோஃபிக்ஸ்® பிளஸ் 3.0 இன் உலகளாவிய வெளியீடு
 • லித்துவேனியா மற்றும் கனடாவில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • IFA டல்னில், பயோமின் மற்றும் ரோமர் லேப்ஸ்® ஒருங்கிணைப்பில் மைக்கோடாக்சின் ஆராய்ச்சிக்கான CD ஆய்வகம் நிறுவப்பட்டது

2003-now

 • பிரான்ஸ் மற்றும் ருமேனியாவில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • ஆக்ராடாக்சின்கள் மற்றும் ஜீராலெனோன் உயிரி மாற்றம் செய்வதற்கு மைக்கோடாக்சின் செயலிழப்பு "MTV" -க்கான புதிய திரிபு கண்டறியப்பட்டது
 • தாய்லாந்து, ஷாங்காய் மற்றும் ஆஸ்திரேலியாவில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • முதல் உலக ஊட்டச்சத்து மன்றம் ஆஸ்திரியா, சால்ஸ்பர்க் நகரில் நடந்தது
 • மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • பயோமின் ஆராய்ச்சி மையம் மற்றும் ரோமர் லேப்ஸ்® இன் புதிய இல்லமான, தொழில்நுட்ப மையம் டல்னில் திறக்கப்பட்டது
 • செயல்முறை விலங்கு ஊட்டச்சத்து மையம் (CAN) தொடங்கப்பட்டது
 • குரோஷியா மற்றும் பிரேசிலில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • செக் குடியரசு, ரஷ்யா மற்றும் உக்ரைனில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன
 • தலைமையகம் விரிவாக்கப்பட்டது
 • போலந்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது
 • பிரேசில் நொதித்தல் ஆலைகளில் உற்பத்தி துவங்கியது
 • அக்வாஸ்டார்® அறிமுகப்படுத்தப்பட்டது
 • ஜெர்மனியில் புதிய கிளை அலுவலகம் தொடங்கப்பட்டது
 • கம்போடியா, இந்தோனேசியா, அர்ஜெண்டினா மற்றும் துருக்கியில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன மற்றும் விநியோக கூட்டாளர்கள் இணைக்கப்பட்டனர்
 • குடல் மைக்ரோஃப்ளோராவிற்கான பலனை ஊக்குவிக்கும் பலவகை இனங்கள் ஒருங்கிணைந்த தயாரிப்பான பவுல்ட்ரிஸ்டார்® உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது
 • ஊட்டச்சத்து, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் இடையே சமநிலையை ஏற்படுத்தும் புதுமையான கருத்துரு கொண்ட நியூட்ரிஎகனாமிக்ஸ்® அறிமுகப்படுத்தப்பட்டது
 • "BIOMIN - Natuarally Ahead": புதிய நிறுவன ஸ்லோகன் அறிமுகப்படுத்தப்பட்டது
 • தென் ஆப்பிரிக்காவில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது
 • இயற்கையான வளர்ச்சி ஊக்குவிப்பானாகிய பயோட்ரானிக்® டாப் 3 அறிமுகப்படுத்தப்பட்டது
 • ஈஸ்ட் மரபுவழி தயாரிப்பாகிய லேவாபான்® அறிமுகப்படுத்தப்பட்டது
 • அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீட்டின் கீழ் முழுமையாக சான்றளிக்கப்பட்ட முதல் உலகளாவிய தீவன சேர்க்கை நிறுவனமாக பயோமின் உருவெடுத்தது
 • ERBER குழுமத்தின் ஒரு பகுதியாக, பயோமின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தை தொடங்கியது
 • மைக்ரோப்ளஸ் நிறுவனத்தை வாங்கிய பிறகு உலகளவில் முக்கிய சந்தைகளில் டைஜஸ்டாரோம் ® அறிமுகப்படுத்தப்பட்டது
 • ஐந்தாவது உலக ஊட்டச்சத்து மன்றம் சிங்கப்பூரில் நடைபெற்றது
 • வியட்நாமில் பின் டூயாங் மாகாணத்தில் இரண்டாவது உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது
 • சீனாவில் வுசிவில் புதிய தொழிற்சாலைக்கான பூமிபூஜை நடைபெற்றது
 • ஆஸ்திரியாவின் கெட்சர்ஸ்டோர்பில் புதிய ERBER குழ வளாகத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது
 • ஃபுமிசைம்® அறிமுகப்படுத்தப்பட்டது
 • மைக்கோஃபிக்ஸ்® செக்யூர் மற்றும் பயோமின்® BBSH 797 க்கான ஐரோப்பிய ஒன்றிய அங்கீகாரங்கள் பெறப்பட்டன