தரம்

பயோமின் வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மீது எந்த நேரத்திலும் முழு நம்பிக்கையுடன் தயாரிப்புகளை வாங்க முடியும் என்ற நிலையில் எங்களது தரம் இருக்கிறது. இதனையே எங்களது வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர், மேலும் மிகவும் பாராட்டுகின்றனர். இந்த மதிப்பின் காரணமாகவே நாங்கள் செய்யும் அனைத்திலும் நாங்கள் போராடி நிலைத்திருக்கிறோம்.

நாங்கள் உற்பத்தி செயல்முறை முதல் இறுதி தயாரிப்பு வரை, சுகாதார பொருட்கள், தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் மூலப்பொருட்களின் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரத்தை அடையவும் பராமரிக்கவும் முயற்சி செய்கிறோம். எங்களது தர மதிப்பீடுகளை இங்கே காணலாம்.

தரமான தயாரிப்புகள்

அனைத்து மூலப்பொருட்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சப்ளையர்கள் குழுவினரிடமிருந்து தனித்தனியாக கொள்முதல் செய்யப்பட்டு, கடுமையான பெறுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம்பகமான சப்ளையர்களுடன் நீண்டகால வணிக உறவு ஒப்பந்தம் மேற்கொள்வது பயோமினின் கொள்கை ஆகும். இது நிலையான மற்றும் உயர் தரத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

அனைத்து பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது வலிமையான தரப்பரிசோதனைகள் மேற்கொள்வது பயோமின் உற்பத்தி செயல்முறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

ஊக்கம் நிறைந்த குழு

தொடர்ச்சியான கற்றல் என்பது நமது பெருநிறுவன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். தொடரச்சியான பயிற்சி திறமைகளைத் தூண்டுகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக, அது எங்கள் ஊழியர்களின் மன உறுதியையும், உந்துதலையும் வலிமையாக வைத்துக்கொள்கிறது.

தரநிலைகளை அமைத்தல்

அகத் தரநிலைகளின் தொடர் முன்னேற்றம் சார்ந்தே வெற்றி அமையும் என்பதை பயோமின் நம்புகிறது.

1997 ஆம் ஆண்டில், பயோமின் சர்வதேச ISO 9001 அகத் தரநிலையை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பயோமின் உற்பத்தித் தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள HACCP அமைப்பு, வாடிக்கையாளர்கள் விரும்பும் தரத்திற்கு உத்திரவாதம் வழங்குகிறது.

GMP +, FAMI-QS மற்றும் QS போன்ற சர்வதேச மற்றும் அக ஊட்ட தரத் தரநிலைகள் எங்கள் உற்பத்தியில் மூலப்பொருள் கொள்முதல் இருந்து இறுதி உற்பத்தி வரை மிக உயர்ந்த கட்டுப்பாட்டையும் தரத்தையும் உத்தரவாதம் செய்கின்றன.

தரம் வாய்ந்த ஊட்டம் மற்றும் தரமான உணவுக்கான அடிப்படையை பயோமின் அறிந்தே வைத்திருக்கிறோம். வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களது முதல் இலக்கு என்பதால் எப்பொழுதும் இந்த துறையிலேயே மிகச் சிறந்த தர அளவுகோல்களை நாங்கள் பின்பற்றுகிறோம்.

ISO 14040 ஆயுள் சுழற்சி மதிப்பீடு

செப்டம்பர் 2011 இல், பயோமின் ISO 14040 "ஆயுள் சுழற்சி மதிப்பீடு" (ISO 14040 "Life Cycle Assessment") சான்றிதழை நிறைவு செய்தது. தீவனப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் விலங்கு செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், கால்நடைகளின் நடவடிக்கைகளில் கொட்டகையில் வாயு வெளிப்படுதலைக் குறைக்க முடியும்.

ISO 14040 "ஆயுள் சுழற்சி மதிப்பீடு" பற்றிய தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

கேள்விகள் அல்லது விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ள:  Opens window for sending emailquality(at)biomin.net