பயோமினின் உளப்பூர்வமான ஆராய்ச்சிகள்

நாங்கள் செய்யும் அனைத்திற்கும் ஆராய்ச்சியும் மேம்பாடுமே அடித்தளமாகும். அனைத்து பயன்பாடு சார்ந்த அடிப்படை ஆராய்ச்சிகளும் ஆஸ்திரியாவில் டல்னில் உள்ள பயோமின் ஆராய்ச்சி மைய (BRC - பயோமின் ரிசர்ட் சென்டர்) வளாகத்தில் எங்களது சொந்த R & D குழுவினரால் நடத்தப்படுகிறது.

உலகளாவிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்தமையால் பயோமின் ஆராய்ச்சி மையம் பலமுடன் விளங்குகிறது. விலங்குகள் ஊட்டச்சத்தில் எல்லைகளை விரிவடையச் செய்வதற்கும், போட்டியில் ஒருபடி முன் நிற்கும் வகையில் வாடிக்கையாளர் சார்ந்த தீர்வுகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இந்த ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது.

பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனான கூட்டு திட்டங்கள் மூலம், பயோமின் தொடர்ந்து சமீபத்திய விஞ்ஞான அறிவியலுடன் தொடர்பில் உள்ளது, இதன் காரணமாக புதிய தீவனச் சேர்க்கைகள் உருவாக்கப்பட்டு உற்பத்திச் செய்யப்படுகின்றன. நாங்கள் உலகளவில் தற்போது 150 அமைப்புகளுக்கும் மேல் இணைந்திருக்கிறோம்.

பயோமின் ஆராய்ச்சி மையங்கள்

டல்னில் உள்ள பயோமின் ஆராய்ச்சி மையம் (BRC - பயோமின் ரிசர்ச் சென்டர்) கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு, என்சைமாலஜி, உயிரியக்க உயிரணு வளர்ச்சி, பகுப்பாய்வு வேதியியல், குடோமிக்ஸ், உயிரணு உயிரியல் மற்றும் உயிர் வளியேற்ற மூலப்பொருள் உருவாக்கம் முதலிய பிரிவுகளில் ஆராய்சிக் குழுக்களைக் கொண்டிருக்கிறது.

எங்களது விஞ்ஞானிகள் கால்நடை வளர்ப்பு துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக விளங்கும் சாதனமாக, பெரும்பாலும் மூலக்கூறு மட்டத்திற்கு கீழ், புதிய முறைகளை உருவாக்குவதற்கு பணியாற்றுகிறார்கள்.

கெட்சர்டோர்பில் உள்ள மேம்பாட்டுத் துறை

தயாரிப்புகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்னர், தயாரிப்பு முன்மாதிரிகள் மேம்பாட்டுத் துறையின் குழுவால் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.

டல்ன் வளாகம்

விலங்கு அறிவியலில் உள்ள பல்வேறு துறைகளில் திறம்பட பயன்படுத்தும் வகையில் புதிய மூலப்பொருட்களை உருவாக்குவதற்காக பயோமின் ஆராய்ச்சியாளர்கள் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளுடன் ஒருங்கிணைந்து டல்ன் வளாகத்தில் பணியாற்றுகிறார்கள்.

செயல்முறை விலங்கு ஊட்டச்சத்து மையங்கள்

பயோமின் செயல்முறை விலங்கு ஊட்டச்சத்து மையங்கள் (CAN - சென்டர்ஸ் ஃபார் அப்ளைடு அனிமல் நியூட்ரிசன்) என அறியப்படும் பல சோதனை வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த வசதிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புகள், பயோமின் தாயாரிப்புகளின் பயன்பாடு மற்றும் சோதனைக்கு உலகளாவிய ஆராய்ச்சி நெட்வொர்க் வசதியை எளிதாக்குகின்றன.

ஆராய்ச்சி செயல்பாடுகள்

எங்களது அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சி குழுக்கள், விலங்கு தீவனத் துறையில் புதிய தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கான சாதனங்களாக, பெரும்பாலும் மூலக்கூறு மட்டத்திற்கு கீழ், புதிய முறைகளை உருவாக்குகின்றன.

கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு

 • நுண்ணுயிரியல் நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற வழிமுறைகள் பற்றிய புலனாய்வு
 • புதிய என்சைம்கள் கண்டுபிடித்தல் மற்றும் அதன் புதிய பண்புருக்களை உருவாக்குதல்
 • ஆரம்பகால முன்மாதிரி

“அடித்தளத்திற்கும் அப்பால் - விலங்கு ஊட்டச்சத்தின் எதிர்கால உயிரியல் மற்றும் தொழில்நுட்பம்”

என்சைமாலஜி - Enzymology

 • மரபணு வெளிப்பாடு மற்றும் மறுஇணைப்பு என்சைம்களின் சுத்திகரிப்பு
 • என்சைம் செயல்பாட்டு மதிப்பீடுகள் மற்றும் என்சைம் இயக்கவியல்
 • புரதப் பொறியியல் மூலம் என்சைம் வளர்ச்சி

“இயற்கையின் வினையூக்கிகள் - அவை மைகோடாக்ஸின் மாற்று மற்றும் பாதுகாப்பான விலங்கு ஊட்டச்சத்துக்காகப் பயன்படுத்துகின்றன”

உயிர் செயல்முறை மேம்பாடு - Bioprocess Development

 • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் என்சைம்களுக்கான உயிர் செயல்முறையை உருவாக்குதல்
 • நொதித்தல் செயல்முறைகளின் மேம்படுத்தல்
 • கீழ்நிலை செயல்முறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல்
 • உயிர் செயல்முறைகளை மேம்படுத்துதல்

“ஒரு செல்லில் இருந்து பல செல்களுக்கு - அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறைப் பயன்பாடுகளாக மாற்றுதல்”

பகுப்பாய்வு வேதியியல்

 • கரிம அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நியூக்ளியோட்டைடுகள் மற்றும் ஆலை சாறுகள் முதலியவற்றில் HPLC பகுப்பாய்வு
 • மைக்கோடாக்ஸின்கள் மற்றும் உயிரியக்கவியலாளர்களின் LC-MS / MS பகுப்பாய்வு
 • பைட்டோஜெனிக் செயல்படும் சேர்மங்கள் பற்றிய GC-MS பகுப்பாய்வு
 • நுண்ணுயிரியலில் ருமேன் நொதித்தல் தொடர்பான பொருட்களின் விளைவுகளை ஆய்வு செய்தல்

“மூலக்கூறுகளாக பொருட்களை உடைத்தல் - எங்களது தயாரிப்புகள் எவ்வாறு சரியாக வேலை செய்கின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்கிறோம்”

GUTomics - கடோமிக்ஸ்

 • நோய்க்காரணி தடுப்பு போன்ற அற்புதமான பண்புகள் கொண்ட குடல் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பு
 • குடல் நுண்ணுயிர் வேறுபாடு மற்றும் கலவை பற்றிய டி.என்.ஏ சார்ந்த பகுப்பாய்வு
 • நுண்ணுயிர் சமுதாய மரபணுக்களில் செயல்பாட்டு திறனை ஆராய மெட்டாஜினாமிக்ஸ்
 • ஆர்.என்.ஏ மட்டத்தில் (ஹோஸ்ட் மரபணு வெளிப்பாடு) விலங்குகளின் எதிர்வினையைக் கற்க டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ்

“ஆரோக்கியமான குடல் பற்றிய அடிப்படை புரிதல் மற்றும் உணவுக்கான அதன் எதிர்வினை”

செல் உயிரியல் - Cell Biology

 • 7 வெவ்வேறு விலங்கு இனங்களில் இருந்து 16+ வெவ்வேறு செல் வகைகளின் மீது ஆய்வு மற்றும் பரிசோதனை
 • புதிய திசு மற்றும் செல் வளர்ச்சி மாதிரிகளை நிறுவுதல்
 • தடுப்பாற்றல், எதிர்ப்பு அழற்சி மற்றும் எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை ஆய்வு செய்தல்
 • வெளிச் சோதனை மற்றும் உட்சோதனை மூலம் குடல் தடுப்பு செயல்பாடுகளைக் கற்றல்
 • தீவன மாதிரிகளின் ஆய்வு

“ஆரோக்கியமான குடல் பற்றிய அடிப்படைப் புரிதல் மற்றும் உணவுக்கு அதன் எதிர்வினை”

உயிரியக்க மூலக்கூறு உருவாக்கம் - Bioactive ingredient formulation (BIF)

 • உலர் செயல்முறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல்
 • உயிரியக்க மூலப்பொருட்களின் செயல்திறனை அதிகரிக்க வடிவமைத்தல் மற்றும் இணைத்தல் செயல்முறைகள்
 • வாடிக்கையாளர் திருப்திக்கு உத்திரவாதமளித்தல் மற்றும் உருவாக்கங்களை மதிப்பீடு செய்தல்

“நாங்கள் தனித்துவத்துடன் உருவாக்கிய வடிவமைப்புடன் உயிரி செயல்திறனை அதிகரிக்கிறோம் மற்றும் குறிப்பிட்ட இலக்கில் வெளியிடுகிறோம்”