நிலைப்புத்தன்மை - Sustainability
ஒரு வாழும் உயிரனங்களுக்கான மற்றும் மனிதர்களுக்கான அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவேற்றும் துறையில் இருக்கும் நிறுவனமாக, நாங்கள் ஆரோக்கியம், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான நிலையான அணுகுமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பசுமை உற்பத்தி - Green production
சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ISO 14001 இன் செயல்படுத்தல் மற்றும் சான்றளிப்பில் கூடுதலாக, அனைத்து தயாரிப்புகளின் வாழ்க்கைச் சுழற்சியுடன் தொடர்புடைய சூழல் தாக்கங்களை அளவிடுவதற்கு பயோமின் முழு வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வை (
ISO 14040 &
ISO 14044) நடத்தி வருகிறது. இதன் மூலம், பயோமின் அதன் தயாரிப்புகளில் சுற்றுச்சூழல் ரீதியாக தடம்பதித்து கண்டறிந்து அளவிடுகிறது. மேலும் விலங்குகளில் பயோமின் தயாரிப்புகளின் விளைவுகளை செயல்திறனை மேம்படுத்துவதற்கேற்ப அளவிட்டு, CO2


வணிகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - Renewable energy in business
தனது சொந்த சுற்றுச்சூழல் தடத்தில் கவனம் செலுத்துகையில், பயோமின் அதன் தினசரி வணிகச் செயல்பாடுகளில் புதுப்பித்தக்க ஆற்றலில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறது. அலுவலக கட்டிடங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வெப்பம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கான பாகாஸ்ஸி உயிர் எரிபொருள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதால், சிறந்த காப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்கள் கிடைக்கின்றன. இதன் விளைவாக, 90% க்கும் அதிகமான ஆற்றல் தேவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.
வியட்நாமில் உள்ள புதிய ஆலையில், அலுவலகக் கூரைகளில் புற்கள் நிறைந்திருக்கின்றன, மேலும் புதிய வசதியான சுவர்கள் ஆற்றல் பாதுகாப்பிற்காக ஆட்டோக்ளேவ்ட் காற்றோட்டமான கான்கிரீட் தொகுதிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சோலார் பேனல்கள் தொழிற்சாலை தொடர்ந்து செயல்படுவதற்கு 30% ஆற்றலை வழங்குகின்றன.
2015 இல் கட்டி முடிக்கப்பட்ட புதிய பயோமின் தலைமையகம், காப்பிடப்பட்ட கட்டிட மேல் ஓடு, வெப்பமண்டல மீட்டல் மற்றும் ஒளி மின்னழுத்த ஆற்றலை உள்ளடக்கிய, நிலத்தடி நீர் வெப்பநிலை மற்றும் குளிரூட்டல் மற்றும் காற்றோட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளது. ERBER குழு வளாகம் அமெரிக்க பசுமைக் கட்டிட குழுவில் இருந்து பிளாட்டினம் வகுப்பு LEED (லீடர்ஷிப் இன் எனர்ஜி அண்ட் எவ்னிராண்ட்மெண்ட் டிசைன்) சான்றிதழை ஆஸ்திரியாவில் பெற்ற முதல் கட்டிடமாகும்.
தரமான தீவன ஊட்டச்சத்து - Quality feed nutrition
தீவனப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் விலங்கு செயல்திறனை மேம்படுத்துதல் இரண்டும் கால்நடை செயல்பாடுகளில் GHG உமிழ்வுகளைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளன. பயோமின் தீவனச் சேர்க்கைகள் ஊட்ட பரிமாற்றத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவை கால்நடை உற்பத்தியில் CO2 உமிழ்வுகளை கணிசமாகக் குறைக்கின்றன.
பயோமின் தயாரிப்பு உற்பத்தியில் 1 டன் அளவு CO2 வெளியாகிறதெனில், அதற்கு சமமான பிராய்லர் மூலம் உற்பத்தி செய்கையில் 128 டன் அளவு CO2 வெளியாவதாக ஒப்பீட்டு ஆய்வுகள் காட்டுகின்றன. ஊட்ட பரிமாற்றம் மற்றும் எடை அதிகரிப்பின் மீதான நேர்மறையான தாக்கங்கள் தவிர்த்து, தீவனத்தில் மேட்ரிக்ஸ்-இணைக்கப்பட்ட பிட்டோஜெனிக் தீவன சேர்க்கை (வர்த்தக ரீதியாக Biomin® PEP MGE) காரணமாக நொதித்தல் தயாரிப்புகள் நிலை குறைதல் மற்றும் புரத செரிமானம் அதிகரித்தல் நடைபெறுவதன் மூலமாக, பன்றி உற்பத்தியில் அம்மோனியா உமிழ்வுகள் கணிசமான அளவு குறைகின்றன.
நியூட்ரிஎகனாமிக்ஸ் - Nutrieconomics
பயோமினின் நியூட்ரிஎகனாமிக்ஸ்® கருத்துப்படிவம் ஊட்டச்சத்து, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. நியூட்ரிஎகனாமிக்ஸ்® இல் உள்ள இந்த மூன்று சேர்க்கைகளின் இணைப்பு நிலையான விலங்கு உற்பத்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது குறைந்த செலவு கொண்டதாகவும், சூழல் ரீதியாக உகந்ததாகவும் இருக்கிறது.
