நாங்கள் யார்

ஆரோக்கியமான விலங்குகள் ஊட்டச்சத்துக்காக நாங்கள் கவனம் கொள்கிறோம் - இயற்கையாக ஒருபடி முன்னே

பயோமின் புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். நாங்கள் விலங்குகள் ஊட்டச்சத்தில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் மூலமாக எங்களது வாடிக்கையாளரின் வெற்றிக்கு உறுதியளிக்கிறோம்.

எங்களது அறிவியல் மற்றும் நிபுணத்துவத்தின் பயன்பாடு எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கவலைகளை முதலில் புரிந்துகொண்டதாகவும், மெச்சும் வகையிலும் அமைந்ததாகும். இந்த கொள்கை எங்களை விலங்குகள் ஆரோக்கியம், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறன் முதலியவற்றுக்கு ஆதரவளிக்கும் தீர்வுகளை வழங்கச் செய்கிறது.

நாங்கள் என்ன செய்கிறோம்

விலங்குகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் பயோமின், பொருளாதார ரீதியாக சாத்தியமான வழிகளில் விலங்குகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உணவுச் சேர்க்கைகள், முன்கலப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கி உற்பத்தி செய்கிறது.

எங்களது தயாரிப்புகள் மைக்கோடாக்சின் இடர் மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் அவை பன்றி, கோழி, பசு மற்றும் கால்நடைகள் அத்துடன் நீர்வாழ்வன ஆகியவற்றுக்கான உணவுத்தேவைகள் குறித்த குறிப்பிட்ட தீர்வுகளை வழங்குவதோடு, இயற்கையாக வளர்வதற்கான முழுமையான அணுகுமுறைகளையும் கொண்டிருக்கின்றன.

பயோமினின் உறுதியான நிலை:

 • எங்களது வாடிக்கையாளர்களில்
 • செயல்திறன்-சார்ந்த புதுமைகளில்
 • திறமையை வளர்க்கும் மற்றும் அங்கீகரிக்கும் பெருநிறுவன கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில்
 • நிலைப்புத்தன்மைக்கே முன்னுரிமை என்ற முடிவில்

பயோமின் நிறுவனக் கொள்கை

எங்கள் கூட்டாளர்களின் (வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் சப்ளையர்கள்) எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதே எங்களது நோக்கம் ஆகும். இது தரம், சுற்றுச்சூழல், நெறிமுறைகள், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முதலியவற்றைக் கணக்கில் கொண்டு இலாபத்தன்மையையும் நிலைப்புத் தன்மையையும் மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது.

 • எங்களது வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கள் கூட்டாளர்கள் ஆவர். நாங்கள் நீண்டகால, நம்பகமான மற்றும் அதன் மூலம் ஆக்க வளம் கொண்ட உறவுகளைப் பேணுகிறோம்.
 • எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உயர் தரத்தை பராமரிப்பது எங்களது ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பாக இருக்கிறது.
 • தொடர்ச்சியான மேம்பாடுகளும், கண்டுபிடிப்பும் எங்களது இலக்குகள் ஆகும். இது எங்கள் வாடிக்கையாளர்களின் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பொருளாதார வெற்றிக்கு உதவுகிறது.
 • நாங்கள் சர்வதேச மற்றும் செயல்முறை சார்ந்த குழுப்பணியை வலியுறுத்துகிறோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், எங்களது உலகளாவிய நடவடிக்கைகளில் உள்ள கலாச்சார வேறுபாடுகளை மதிக்கிறோம். வயது, பாலினம், மதம் அல்லது தேசியத்துவம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - எல்லா மனிதர்களுக்கும் மதிப்பும் மரியாதையையும் வழங்குகிறோம்.
 • தொடர்புடைய மற்றும் சட்டப்பூர்வ சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
 • எங்களது அனைத்து கையாளுதல்களிலும் நெறிமுறைக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம். நாங்கள் சூழல்களுக்கு பொருத்தமாகவும், சிறந்த முறையிலும் செயல்படுகிறோம்
 • வியாபாரம் மற்றும் வர்த்தக இரகசியங்களை பாதுகாப்பது எப்படி என நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம்.
 • பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக வளங்களை கவனமாகவும் செயல்திறன்மிக்க விதத்திலும் கையாள்வதில் நாங்கள் பொறுப்புடன் செயல்படுகிறோம்.
 • புவி வெப்பமயமாதல் அச்சுறுத்தலைக் குறைப்பதில் எங்களது பங்கினை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.
 • நிறுவன நடத்தை விதிகளின் கொள்கைகளுக்கு இணங்கி நாங்கள் செயல்படுகிறோம்.

நாங்கள் முன்னோடிகளாக, கூட்டாளர்களாக செயல்திறன் மிக்கவர்களாக இருக்கிறோம். இதன் காரணமாகவே பயோமின் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, எங்களது வணிக பங்குதாரர்களும் எங்களுடன் இருக்கின்றனர்

We are Pioneers, Partners and Performers. This is why BIOMIN is successful – and with us our business partners.