அக்வாஸ்டார்® - AquaStar®

நீர் வாழ்வன வளர்ப்பில் இயற்கையாக முன்னோக்கி!

அக்வாஸ்டார்® (AquaStar®) என்பது நீர்வாழ் உயிரினங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பயோமின் (BIOMIN) நிறுவனத்தின் பல திரிபுள்ள புரோபயாட்டிக் புராடக்ட் வகை ஆகும். அக்வாஸ்டார்® (AquaStar®) புராடக்ட் வகையானது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான புரோபயாட்டிக் மற்றும் உயிரிசிதைவுறு பண்புக்கூறுகள் அடங்கிய பல்வேறு பாக்டீரியா திரிபுகளை கொண்டுள்ளது.

நோக்கம்

கூனி இறால் மீன் மற்றும் இதர மீன் வளர்ப்பில் மீன் நோய்க்கிருமிகள் மற்றும் குளத்தின் சவாலான நிலைமைகள் பொதுவான பிரச்சினைகளாக உள்ளன. மீன்களின் வளர்ச்சியை பாதகமான நிலைமைகள் பாதிக்கின்றன. இதன் காரணமாக, மீன்கள் இறந்து போகலாம் மற்றும் விவசாயிக்கு இழப்புகள் ஏற்படலாம். நீர்வாழ் விலங்குகளின் ஒரு நிலையான உற்பத்தியை அடைவதற்கு உதவுகின்ற பாதுகாப்பான மற்றும் நிலைத்து நீடிக்கின்ற தீர்வுகளை கைக்கொள்ள வேண்டியது முக்கியமாகும். நீர்வாழ்வன வளர்ப்பு சுற்றுச்சூழலில் உள்ள சிக்கல் தன்மையை திறம்பட வெற்றிக்கொள்வதற்கு குளத்தில் அனைத்து மட்டங்களிலும் நடைபெறுகின்ற செயல்தொடர்புகள் பற்றிய ஒரு ஆழமான புரிதலின் அடிப்படையிலான ஒரு உத்தியை கைக்கொள்ள வேண்டும்.

அக்வாஸ்டார்® (AquaStar®) ஆனது நீரின் தரத்தை நிலைப்படுத்துகிறது, குளத்தின் அடிப்புற தரத்தை மேம்படுத்துகிறது, மீன் மற்றும் கூனி இறாலின் உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளின் சுகாதாரநலனை பேணிக்காக்க உதவுகிறது. இதன் மூலம், உற்பத்தியில் செயல்திறனையும் பலனளிப்புத்திறனையும் மேம்படுத்துகிறது.

செயல்படும் முறை

 • நீரின் தரத்தை மேம்படுத்துகிறது
 • நொதிய செயல்பாடு ஆனது செரிமானத்திற்கு உதவுகிறது
 • நோய்க்கிருமிகளுக்கு எதிராக மட்டுப்படுத்துகின்ற சேர்மங்களை உற்பத்தி செய்கிறது
 • • வரம்புக்குட்பட்ட வளங்களை பெறுவதில் ஏற்படும் போட்டி காரணமாக ஒரு வாழ்விடத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு உயிரினங்களுள் ஒன்று நீக்கப்படுதல் கோட்பாட்டின்படி நோய்க்கிருமிகளை நீக்குகிறது
 • • நோயெதிர்ப்புப் பதில்வினையை மேம்படுத்துகிறது

முக்கிய பலன்கள் யாவை?

 • மேம்பட்ட வளர்ச்சி மற்றும் சுகாதாரநலன் செயல்திறன்
 • நீர்வாழ்வன உயிர் பிழைப்பதற்காக சிறந்த முறையில் உதவுகிறது
 • வலுவாக உள்ளமைந்த நோயெதிர்ப்புப் பதில்வினை
 • மேம்பட்ட பாக்டீரியா தூள்மத் திரள் உருவாக்கம்
 • மேம்பட்ட நீரின் தரம்
 • குறைக்கப்பட்ட குளத்தின் அடிப்புற கசடு
 • எந்த எதிர்மறையான பக்க விளைவுகளும், திரும்பப் பெறும் முறைகளும் இல்லை

தயாரிப்புகள்

அக்வாஸ்டார்® (AquaStar®) புராடக்ட்கள் தீவனத்திலும் நீரிலும் பயன்படுத்துவதற்காக பொடி வடிவத்தில் கிடைக்கின்றன. புராடக்ட் வகை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

 • முட்டைப்புழு குஞ்சுபொரிப்பு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அக்வாஸ்டார்® ஹாட்சரி (AquaStar® Hatchery)
 • மீன் குஞ்சுகளை விற்பனைக்கு ஏற்ற பெரிய மீன்களாக வளர்க்கும் வரையிலான காலக்கட்டத்தில் (குரோஅவுட் காலக்கட்டம்) உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அக்வாஸ்டார்® குரோஅவுட் (AquaStar® Growout)
 • குளத்து நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு அக்வாஸ்டார்® பாண்டு (AquaStar® Pond)
 • செறிந்த வளர்ப்பு நிலைமைகளின் கீழ் குளத்தின் அடிப்புறத்தையும் நீரின் தரத்தையும் மேம்படுத்துவதற்கு அக்வாஸ்டார்® பாண்டுஸைம் (AquaStar® PondZyme)

அக்வாஸ்டார்® (AquaStar®) பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும் மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.

அக்வாஸ்டார்® ( AquaStar®) ஆனது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைப்பதில்லை.