பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விட் - Biomin® CleanGrain liquid

தீவனப் பதனத்தில் இயற்கையாக முன்னோக்கி!

பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விட் (Biomin® CleanGrain liquid)என்பது தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களை பதனிடுவதற்கான செயல் வீரியமிக்க பொருட்களின் ஒரு தனித்துவமான கலவை ஆகும். பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விடில் உள்ள (Biomin® CleanGrain liquid) நல்ல சமச்சீரான கலவையாக்கத்தின் காரணமாக, இது தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களின் காற்றுள்ள பதனம் மற்றும் காற்று இல்லாத பதனத்தின் போது பூஞ்சனங்கள், ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றால் ஏற்படும் கெடுதலுக்கு எதிராக மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

முக்கிய பலன்கள் யாவை?

  • பாதுகாப்பானது (அரிப்புத்தன்மை இல்லாதது) மற்றும் கையாள்வதற்கு எளிதானது
  • பூஞ்சனம், ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றின் காரணமாக காற்றுள்ள பதனத்தின் போது ஏற்படும் கெடுதலுக்கு எதிராக பலனளிப்புத்திறன்மிக்கது
  • தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பை பராமரிக்கிறது
  • சிக்கனமான ஆக்கவிலை கொண்டது

பயன்படுத்தும் முறை

பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விட் (Biomin® CleanGrain liquid) தானியங்கள், தீவனம், பதனப் பசுந்தீவனம், வைக்கோல், நொதிக்கப்பட்ட தானியம், கரையத்தக்க பொருட்கள் கொண்ட ஈர வடிசாலை தானியங்கள் (WDGS) ஆகியவற்றின் பதனத்திற்காகவும் சர்க்கரைக்கிழங்கில் இருந்து சர்க்கரை நீக்கப்பட்ட சக்கை தீவனத்தைக் குழிப்பதனம் செய்வதற்காகவும் பயன்படுத்த முடியும்.

பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விட் (Biomin® CleanGrain liquid) பயன்பாடு கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது:

  • நுண்ணுயிர் மாசு
  • பூஞ்சன வளர்ச்சி
  • ஆக்சிஜனேற்ற செயல்முறைகள்
  • நச்சுப்பொருள் உற்பத்தி
  • சுகாதாரநல இடர்கள்

பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விட் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.