டைஜெஸ்டாரோம்® - Digestarom®

மேம்பட்ட தீவன பலனளிப்புத்திறனுக்காக மேம்பட்ட செரிமானம்

டைஜெஸ்டாரோம்® (Digestarom®) என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் (phytogenic) புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைஜெஸ்டாரோம்® (Digestarom®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி, அசை போடும் விலங்கினம், மீன் மற்றும் கூனி இறால் தீவனங்களிலும், நட்புடன் பழகி உடனிருக்கும் விலங்கு உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

பைட்டோஜெனிக்ஸின் (Phytogenics) சக்தியை உங்கள் உணவுத்திட்டத்திற்குள் சேர்க்கவும்

 • மூலிகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சுகாதாரநலமளிக்கும் கூட்டுப்பொருட்கள் அடங்கிய சுவைமணப்பொருட்கள் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவை
 • அறிமுறையிலும் செய்முறையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது
 • விலங்கின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது

முக்கிய பலன்கள் யாவை?

 • விலங்குகள் தீவனம் உட்கொள்வதை மேம்படுத்துகிறது
 • உணவுத்திட்ட ஊட்டச்சத்துகளை (அதிலும் குறிப்பாக புரதச்சத்து) மிகவும் பலனளிப்புத்திறனுடன் பயன்படுத்துகிறது
 • தீவன மாற்றுத்திறனையும் வளர்ச்சி விகிதங்களையும் மேம்படுத்துகிறது
 • நோயுறுகிற விகிதத்தையும் இறப்பு விகிதத்தையும் குறைக்கிறது
 • இலாபத்தை அதிகரிக்கிறது
 • பாதகமான பக்க விளைவுகள் எதுவுமில்லை, சந்தைப்படுத்தக்கூடிய விலங்கின் பாலில்/இறைச்சியில் உள்ள மருந்துகளின் படிவுகள் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச படிவு வரம்பை விட குறைவாக ஆவதற்கு தேவையான காலக்கட்டங்கள் எதுவுமில்லை

டைஜெஸ்டாரோம்® -Digestarom®க்கு பின்னால் உள்ள அறிவியல் – செயல்படும் முறை

தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல், உணவுத்திட்டத்தை மாற்றுதல், சுற்றுச்சூழல் நிலைமைகள் அல்லது வசிப்பிட அமைப்பு போன்ற தகைவு காரணிகள் காரணமாக விலங்குகள் குறைவாக தீவனம் சாப்பிடுதல், உச்ச செந்தரத்திற்குக் கீழான செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துகளை மிகக்குறைவாக பயன்படுத்துதல் போன்றவை ஏற்படக்கூடும்.

இந்த காரணிகள் யாவும் விலங்கின் செயல்திறனையும் தீவன பலனளிப்புத்திறனையும் பாதகமாக பாதிக்கின்றன. இதிலுள்ள சமச்சீரான மற்றும் சிறந்த பக்குவமான சுவைமணத்தின் காரணமாக, டைஜெஸ்டாரோம்® ஆனது வணிக உணவுத்திட்டங்களை சாப்பிடத் தூண்டும் தன்மையை மேம்படுத்துகிறது, இதன் மூலம் விலங்குகள் தீவனம் சாப்பிடுவதை மேம்படுத்துகிறது.

மேலும், டைஜெஸ்டாரோம்® ஆனது உணவுத்திட்ட ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதையும் பயன்படுத்துவதையும் மேம்படுத்துகிறது, இதன் மூலம் செரிமானத் திறனையும் தீவன பலனளிப்புத்திறனையும் மேம்படுத்துகிறது.

உயிரணுவின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அளவில் நடத்தப்பட்ட தற்போதைய ஆராய்ச்சியில், டைஜெஸ்டாரோம்® ஆனது உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் அழற்சியை விளைவிக்கின்ற செயல்முறையை தூண்டுகின்ற படியெடுத்தல் காரணி NF-κB-இன் தூண்டலுக்கான பதில்வினையை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் டைஜெஸ்டாரோம்® ஆனது அழற்சியை விளைவிக்காத செயல்பாடு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் செயல்பாடு ஆகிய இரண்டின் செயல்பாடுகளுக்கும் காரணமாக உள்ள படியெடுத்தல் காரணி Nrf2-இன் தூண்டலுக்கான பதில்வினையை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

The Digestarom® டைஜெஸ்டாரோம்® தயாரிப்புத் தொகுப்பானது இரண்டு அடிப்படை புராடக்ட் வகைகளை வழங்குகிறது:

 • ஒரு உயிரினத்திற்கான தீர்வுகள் (Species-specific solutions), இது வெவ்வேறு உற்பத்திக் கட்டங்களில் விலங்குகளிடத்தில் மாறுபடுகின்ற சுவைமணம் கூட்டுதல் முன்னுரிமை விருப்பங்கள் மற்றும் உயிரி செயல்மிகுந்த பண்புகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெவ்வேறு தீவன சூத்திரங்களை வழங்குகிறது
 • பல உயிரினங்களுக்கான தீர்வுகள் (Multi-species solutions), இது வெவ்வேறு விலங்கு உயிரினங்களிடத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு தலையாய தீவன சூத்திரத்தை வழங்குவதன் மூலம் பைட்டோஜெனிக்ஸின் முதன்மையான உயிரி செயல்மிகுந்த பண்புகளின் மீது கவனம் செலுத்துகிறது
டைஜெஸ்டாரோம்® பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்