லெவபான்® ரூமென் இ (Levabon® Rumen E ) என்பது தெளிப்புமுறையில் உலர்த்தப்பட்ட, தானாக சிதைவுற்ற ஈஸ்ட் (சர்க்கரைப்பூஞ்சை நொதியம்) புராடக்ட் ஆகும். இது, செந்தரமான முறையில் ஈஸ்ட் உயிரணு தன் சொந்த நொதிக்களால் சிதைவுறுவதற்கான ஒரு உட்புறச் செயல்முறை நுட்பவியலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஈஸ்ட் புராடக்ட் ஆனது நியூக்ளியோடைடுகள், அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், பெப்ட்டைடுகள், உயிரணுச்சுவர் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற உயிரியியக்க சேர்மானப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும்.
இந்த புராடக்ட் ஆனது நார்ச்சத்தை செரிமானம் செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இயற்கையாக அமையப்பெற்ற பிரீபயாட்டிக் உயிரணுச்சுவர் பாலிசாக்கரைடுகள் (மன்னன் மற்றும் குளுக்கான்) மற்றும் பெப்ட்டைடுகள், அசை போடும் விலங்கின் முதல் இரைப்பையில் உள்ள நன்மை தரும் நுண்ணியிரிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவுடன் ஒட்டிக்கொள்ளும் ஈஸ்ட் உயிரணுச்சுவர் கூறுகளையும் வழங்குகின்றன.
பால் கறவை பசுக்களுக்கு பால்சுரப்பு காலத்திலும் கன்று ஈனுவதற்கு முந்தைய கடைசி மூன்று வார காலத்திலும் கொடுக்கப்படவேண்டும். இது, கன்றுகளுக்கும் இறைச்சி மாடுகளும் பொருத்தமானது.
மொத்த கலவை தீவனப்பங்கீட்டு முறையில் (Total mixed ration) அல்லது தீவன உருண்டையில் கலந்து கொடுக்கலாம்.
லெவபான்® அக்வாகுரோ இ (Levabon® Aquagrow E) என்பது நீர் வாழ்வன வளர்ப்புக்கான தீவனங்களில் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்மிகுந்த, ஊட்டச்சத்து நிறைந்த தீவன கூட்டுப்பொருள் ஆகும்.
லெவபான்® அக்வாகுரோ இ (Levabon® Aquagrow E) சர்க்கரைப்பூஞ்சை நொதியத்தில் (மதுவடிப்பக ஈஸ்ட்) இருந்து ஒரு செந்தரமான முறையில் ஈஸ்ட் உயிரணு தன் சொந்த நொதிக்களால் சிதைவுறுதலை பயன்படுத்தி, தெளிப்புமுறையில் உலர்த்துவதில் இருந்து ஒரு உட்புறச் செயல்முறையால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஈஸ்ட் புராடக்ட் ஆனது அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், பெப்ட்டைடுகள், உயிரணுச்சுவர் கார்போஹைட்ரேட்டுகள், நியூக்ளியோடைடுகள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற உயிரியியக்க சேர்மானப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும்.
சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.
புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.,