மீன் வளர்ப்பு நிபுணத்துவம்

பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஊட்டச்சத்து முதல், உடல்நலம் மற்றும் நோய்த் தடுப்புப்திறனியல் வரை பல்வேறுபட்ட பிரிவுகளை உள்ளடக்கிய மீன்வளர்ப்பு நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை பயோமின் உருவாக்கியுள்ளது. பயோமின் மீன்வளர்ப்பு நிபுணர்களுக்கு வெப்பநீர் மீன் மற்றும் இறால் முதல் குளிர்ந்த நீர் மீன் வரை பல்வேறுபட்ட இனங்களில் செயல்முறை அனுபவம் உள்ளது. இந்த பல் துறை குழு, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு இத்தொழில்துறையை தயார்செய்து வருகையில், மீன்வளர்ப்பில் தற்போதுள்ள முக்கிய தேவைகளை நிறைவேற்றக்கூடிய புராடக்ட்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்கி விலங்கு ஊட்டச்சத்தில் தொடர் புத்தாக்கத்தை நோக்கி பயோமின் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒரு குழுவின் அங்கமாகும்.

மீன்வளர்ப்பு உற்பத்தியில் மற்ற காரணிகளுக்கிடையே, வளர்ச்சி செயல்திறன், உணவு செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மையை மைக்கோடாக்ஸின்கள் பாதிக்கின்றன. இதனால், உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்பது கண்கூடாகும்.

மேலும் அறிய

உலகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உயர்தர உற்பத்திப் பொருட்களை வழங்கவேண்டிய நிலையில், உயர் அளவு உற்பத்தித்திறனை எய்தவேண்டிய சவாலையும் மீன்வளர்ப்பு உற்பத்தித்துறை எதிர்கொள்கிறது. உயிர்த்திரள் ஆதாயமாக தீவனம் மாறுவது என்பது, விலங்கின் செரிமான மண்டலத்தில் தொடங்கும் ஒரு செயல்முறை ஆகும். இந்நிலையில், விலங்கின் ஆரோக்கிய நிலையும் மற்றும் அதன் செரிமான செயற்பணியும் நேரடியாக பண்ணையின் இலாபத்தோடு தொடர்புடையதாகும்.

மேலும் அறிய

குறைந்த தீவன மூலப்பொருட்கள் மற்றும் அவைகளுக்கு அதிக விலைகள் நிலவும் சூழ்நிலையில், அதிக செயல்திறன்மிக்க உற்பத்தியை எய்துவதற்கு தீவன மாற்ற விகிதங்களை உகந்ததாக உயர்த்துவது முக்கியமாகும். மீன் மற்றும் இறாலின் நலனுக்கும் மற்றும் நல்ல செயல்திறனுக்கும் நன்கு செயல்படக்கூடிய செரிமான அமைப்பை பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் அறிய

நல்ல குட்டை மேலாண்மை என்பது இலாபகரமான உற்பத்தியின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒவ்வொரு நீர் தர அளவுகோலும் விலங்கின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கக்கூடும். பொருந்தாத அளவுகளில் கரைந்துள்ள ஆக்ஸிஜன், அம்மோனியா, நைட்ரைட் அல்லது ஹைட்ரஜன் சல்ஃபைட் உள்ள நீர்நிலைகளில் இறால் மற்றும் மீனை வளர்ப்பது, அவைகளுக்கு அழுத்தம் மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

மேலும் அறிய

ஈஸ்ட்டிலிருந்து தயாரிக்கப்படும் துணைப்பொருட்கள் போன்ற நோய் தடுப்பாற்றல் மிக்க மாடுலேட்டர்கள், மீன்/இறால் பண்ணைகளில் நோய் தடுப்புக்கு நம்பிக்கையளிக்கும் உறுதிமிக்க துணைத் தீவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள், சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் உள்ள சந்தர்ப்பவாத நோய் காரணிகளுக்கு எதிராக நீர்வாழ் உயிரினங்களின் (ஹோஸ்ட்) பாதுகாப்பு இயங்கு முறையை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.

மேலும் அறிய

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...