பேக்டீரியல் கான்ட்ரோநெக்ரோசிஸ் மற்றும் ஆஸ்டியோமைலிட்டிஸ் (BCO lameness)

குருத்தெலும்புகளில் திசுக்கள் இறப்பு மற்றும் எலும்பு சீழ் அழற்சி (BCO lameness) ஃபெமோரல் ஹெட்டில் (தொடைப்புழை தலை) உண்டாகும் கிருமி தொற்றினால், குருத்தெலும்புகளில் திசுக்கள் இறப்பு மற்றும் எலும்பு சீழ் அழற்சி உருவாகிறது மற்றும் அதனால் ஃபேமோரல் ஹெட் நெக்ரோசிஸ் (தொடைப்புழை தலை அழுகல்) ஏற்படும். இந்நோய்க்கான காரணங்களில் ஒன்று, குடல் வேலியின் வழியாக குடலிலிருந்து மூட்டுகளுக்கு சாத்தியமுள்ள நோய் விளைவிக்கும் கிருமிகள் இடப்பெயர்ச்சி ஆவதாகும்.

உலகளாவிய கணக்கெடுப்புகள், கால் நொண்டுதல் பிரச்சனை பரந்துபட்டு காணப்படுவதை உறுதி செய்கிறது. ஒரு பொதுவான நோயாகத் திகழும் BCO லேம்னெஸ், நீண்டகாலம் உயிர்வாழும் பறவைகள் மற்றும் வேகமாக வளரும் பறவைகள் ஆகிய இரு பிரிவுகளையும் உலகெங்கிலும் பாதிக்கிறது.

பண்ணை கோழிகளில் 10-15 சதவிகிதம் நோய்குறி தோன்றா/தெளிவற்ற நோய்க்குறி தென்படும் BCO எனப்படும், இளம் பறவைகள் மத்தியில் முதலாவதாக வெளிப்படும் நிலையால் பாதிக்கப்படுகின்றன.(Thorp et al., 1993). நீக்கல் மற்றும் தேர்ந்தெடுப்பின் காரணமாக, BCO இறப்பினை அதிகரிக்கிறது மற்றும் குறைவான உடல் எடை பெறுதல் மற்றும் உயர் அளவிலான FCR – ஐ விளைவிக்கிறது. பாதிக்கப்பட்ட பறவைகளின் நடமாட்டத்திறன் பாதிக்கப்படுவதால், அவற்றால் உணவு மற்றும் நீர் வைக்கப்பட்டுள்ள கலன்களை நோக்கி அடிக்கடி அவைகள் செய்ய வேண்டியதைப்போல நகர முடியாமல் போவதே இதற்கு காரணமாகும்.

குடல் சுவற்றின் உட்புகுதல் திறனை அதிகரித்து அதன் விளைவாக, இரத்த ஓட்டத்தில் நோய் விளைவிக்கும் கிருமிகள் நுழைவதை ஏற்படுத்துவதால், மைகோடாக்ஸின்கள் இப்பிரச்சனையை அதிகரிக்கின்றன.

பலனளிக்கும் நுண்ணுயிரிகளை குடலில் குடியேற்றம் செய்வது, இரத்த ஓட்டப்பாதையில் நோய் விளைவிக்கும் கிருமிகளின் இடப்பெயர்ச்சியை குறைக்க உதவும் (போட்டி விலக்கல்). பலனளிக்கும் நுண்ணுரிகளின் நோயெதிர்ப்புத்திறன் மாற்று விளைவுகள், இப்பிரச்சனையை அதிக திறன்வாய்ந்த முறையில் எதிர்க்க கோழிகளுக்கு உதவுகிறது.

எங்களது தீர்வு

PoultryStar® - பவுல்ட்ரிஸ்டார்®

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, கோழியின வளர்ப்புப் பறவைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பல உயிரினங்களுக்கான ஒரு சின்பயாட்டிக் புராடக்ட் ஆகும். இது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் மற்றும் பிரீபயாட்டிக் ஃபரக்ட்டூலிகோசக்கரைடுகளின் ஒருங்கிணைந்த செயலின் மூலமாக உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் வாழும் நன்மை தரும் நுண்தாவரயினத்தை பெருக்க உதவுகிறது.

மேலும் அறிய!

Mycofix® - மைக்கோஃபிக்ஸ்®

மைகோஃபிக்ஸ்® (The Mycofix®) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

மேலும் உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும்...