தீவனம் மற்றும் தண்ணீர் சுகாதாரம்

உயிரிபாதுகாப்பு மீதான விவாதங்கள், தண்ணிர் மற்றும் தீவனங்கள் பற்றிய விஷயங்களை அநேக நேரங்களில் விவாதிக்காமல் உதாசீனப்படுத்துகின்றன. எனினும், பண்ணையில் நோய் உயிரிகள் நுழைவதற்கான இரு முக்கிய வாயில்களாக இவை இரண்டும் இருக்கின்றன. தீவன உற்பத்தி செயல்முறையின்போது அழிக்கப்படும் அல்லது அழிக்கப்படாத நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் தொகுப்பினால், தீவனம் மாசடையலாம். தீவனத்தை நோய்கிருமிகள் அற்றதாக மாற்றுவதில் வெப்ப சிகிச்சைகள் உதவலாம் என்றாலும், தீவன ஆலையில் குளிரூட்டல் மற்றும் சேமிப்புச் செயல்முறைகளின்போது அல்லது போக்குவரத்து மற்றும் பண்ணையில் சேமிப்பின் போது அவைகள் மீண்டும் மாசடைவதை தடுக்க இயலாது.

அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையின் அடிப்படையில் தண்ணீரின் தரம் மாறுபடலாம். அது நீராதாரத்தை சார்ந்திருப்பதைப்போல, சாத்தியமுள்ள கிருமி மாசுபாடுகளையும் சார்ந்திருக்கிறது. காலப்போக்கில், தண்ணீர் குழாய்களில் உயிரிப்படிமம் (பயோபிலிம்) உண்டாவது விரும்பத்தகாத நோய் உண்டாக்குகிற நுண்ணுயிரிகள் வளர்வதை விளைவிக்கிறது.

எங்களது தீர்வு

பயோடிரானிக்® - Biotronic®

பயோடிரானிக்® (Biotronic®) புராடக்ட் வகை என்பது pH மற்றும் தாங்கல் கொள்திறனை குறைப்பதன் மூலமாகவும் சால்மோனெல்லா இனங்கள், இ.கோலி பாக்டீரியா போன்ற கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் தீவன மற்றும் நீர் துப்புரவை மேம்படுத்துவதற்காக கரிம மற்றும் கனிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவைகளின் ஒரு சேர்க்கை ஆகும். இந்த புராடக்ட்டின் மூலமாக, கலப்புத் தீவனத்தின் ஊட்டச்சத்து மதிப்பு பராமரிக்கப்படுகிறது மற்றும் அதனுடைய கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது என்பதுடன் மட்டுமல்லாமல் அது கெட்டுப்போவதும் அல்லது மறுபடியும் மாசுபடுவதும் குறைந்தபட்சமாக்கப்படுகிறது. பயோடிரானிக்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் மீன் தீவனங்களுக்கு பொருத்தமானது.

மேலும் அறிய

இந்த தலைப்பை பற்றிய மேலதிக தகவல்களுக்கு