மைகோடாக்சின்ஸ் (பூசண நச்சுகள்) - Mycotoxins

குறிப்பிட்ட சில அசைவூண் இரைப்பை நுண்ணுயிரிகளின் குறிப்பிட்ட சில நச்சு நீக்க நடவடிக்கையின் காரணத்தால் பூசண நச்சுகளின் தீங்குவிளைவிக்கும் விளைவுகளிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் சில திறன்கள் அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளது. எனினும், நவீன பால்பண்ணை பசுக்களுக்கு அசைவூண் இரைப்பை வழியாக மிகவும் வேகமாக உணவு செல்லும் வேக வீதம் உள்ளது. இதனால் நச்சுநீக்கம் செய்வதற்கு மிகவும் குறைந்த நேரமே நுண்ணுயிரிகளுக்கு கிடைக்கிறது. இதனுடன் அதிக உணவு உட்கொள்ளலும் உடன்சேர்ந்து விடுவதால் நாம் பொதுவாக எதிர்பார்க்கும் பசுக்களின் இயற்கையான பாதுகாப்பு சக்திகளால் அவற்றை பாதுகாக்க முடியாமல் போய்விடுகிறது.

பூசணநச்சுகளின் தீங்குவிளைவுகள் விலங்கின் வளர்சிதை மாற்றத்தில் தொடங்குவதில்லை. ஆனால் அசைவூண் இரைப்பை நொதித்தல்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை பாதிக்கிற அசைவூண் இரைப்பை சார்ந்த நுண்ணிய தாவரங்களில் தான் தொடங்குகிறது. உண்மையிலேயே, பெரும்பாலான நடைமுறை சாத்தியமுள்ள சூழ்நிலைகளில் மருத்துவ (நோய்) அறிகுறிகள் வெளிப்படாமலிருக்கலாம். ஆனால் அதைத் தொடர்ந்து அதன் செயல்திறனானது பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் குறைந்த பால் உற்பத்தி, மோசமான இனப்பெருக்கம் மற்றும் அதிகரித்த அளவு முடம் அல்லது மார்புச்சீழ்கட்டி ஏற்படக்கூடும்.

பெரும்பாலான நாடுகள் பாலில் கரும் பூஞ்சண நச்சுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், இலாபத்தன்மை மற்றும் விலங்கு ஆரோக்கியம் மற்றும் நலனை பெரிதும் பாதிக்கக்கூடிய இதர முக்கிய பிரிவு பூசண நச்சுகளுக்கு சில சமயங்களில் சட்ட ரீதியிலான கவனம் செலுத்தப்படுவது இல்லாமலிருக்கிறது. அசைபோடும் விலங்குகளுக்கான மிகவும் முக்கிய பூசண நச்சுப்பிரிவுகள் பின்வருமாறு :

  • DON (டியாக்ஸினிவேலினால் அல்லது வாமிடாக்சின்) போன்ற நன்கு அறியப்பட்ட பூசண நச்சுகள் உள்ளிட்ட ட்ரைகோதிசீன்ஸ் (Tricothecenes)
  • ஜியராலிநன் (Zearalenone)
  • எர்காட் அல்கலாய்ட்ஸ் (Ergot alkaloids)

எங்களது தீர்வு

மைக்கோஃபிக்ஸ்® - Mycofix®

மைகோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...